செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷ் இப்படிப்பட்டவர்கள் - பிரபல நடிகை ஓபன் டாக்..!
பல வருடங்களுக்கு பிறகு அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் நானே வருவேன்.
இந்த படத்தை இயக்கி வரும் செலெ்வராகவன் வில்லனாக இந்த படத்தில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக எல்லி அவ்ரம் நடித்துள்ளார்.
இந்த படத்தின் மூலம் செல்வராகவன் குடும்த்தினருக்கு நெருக்கமாகி விட்டதாக கூறப்படுகிறது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னிடம் எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் என கூறியிருந்தார்.
இதையடுத்து ரசிகர் நடிகர் தனுஷ் பற்றி சொல்லுமாறு கூறியிருந்தனர்.அவர்களின் கேள்விக்கு பதில் அளித்த நடிகை எல்லி அவ்ரம்.
நான் இதுவரை நடித்த அன்பான நடிகர்களில் தனுஷும் ஒருவர் எனவும்,மிகவும் ப்ரொஃபஷனல் என்றும், தன்னுடைய வேலைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்,தன்னடக்கம் அவர் ஒரு ஜென்டில்மேன் என கூறினார்.
செல்வராகவன் சார் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்று ரசிகர்கள் கேட்டதற்கு அவர் அருமையான இயக்குநர்,அவரால் தான் வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறினார்.
ஸ்வீடனை பூர்வீகமாக கொண்ட நடிகை எல்லி அவ்ரம்.நடிப்பு மீது கொண்ட ஆசையால் இந்தியாவுக்கு வந்து மும்பையில் தங்கி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.