இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி
இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா மூன்றாவது அலை இந்தியா முழுவதும் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த அலையில் திரைத்துறை பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கமல்ஹாசன், வடிவேலு, விஷ்ணு விஷால், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலரும் கடந்த சில நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தற்போது தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "காலை வணக்கம். இன்று எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
என்னுடன் கடந்த இரண்டு மூன்று நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவர்களை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மிகவும் பாதுகாப்பாக இருங்கள்.
முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் தற்போது தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். மேலும் சாணிக் காயிதம் மற்றும் பீஸ்ட் படங்களில் நடிகராகவும் களமிறங்கியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening
வெளிநாடுகளில் உலங்கு வானூர்திகளை வைத்திருந்த குற்றவாளிகள் : பாதுகாப்பு பிரதி அமைச்சர் பகிரங்கம் IBC Tamil
நீதிபதியின் வருகை நுழைவாயிலில் இரகசியமாக நுழைந்த ஹேமரத்தன தேரர்! ஆரம்பமாகிறது அடுத்த விசாரணை IBC Tamil
Mothers of India: வெறும் 10 மாத வாழ்வு… 5 உயிர்களுக்கு ஒளி தந்து உடல் உறுப்புத் தானத்தில் வரலாறு படைத்த Aalin Manithan