கொரோனா தடுப்பூசிக்கு இதுதான் சிறந்த வழி: இயக்குனர் சீனு ராமசாமியின் ஐடியா
அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் இயக்குனர் சீனு ராமசாமி தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
நாடுமுழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேசமயம் இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியும் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மத்திய மாநில அரசுகள் இது குறித்து தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் இயக்குனர் சீனுராமசாமி ட்விட்டரில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் "குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை எப்படி சன்மானம் தந்து வெற்றிகரமாக அன்றைக்கு நிறைவேற்றினார்களோ அது போல கொரோனா தடுப்பூசியிடும் பணியை தமிழக அரசு நிறைவேற்றி சகல மக்களும் தடுப்பூசியின் மீது ஆர்வம் கொள்ள செய்தல் வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.