நடிகைக்கு பிரபல இயக்குநர் பாலியல் தொல்லை - பத்திரிக்கையாளர் திடுக்கிடும் தகவல்!

Thahir
in பிரபலங்கள்Report this article
நடிகை மனிஷா யாதவை அடுத்து இந்த பிக் பாஸ் நடிகைக்கும் இயக்குநர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை
சமீபத்திய யூடியூப் பேட்டி ஒன்றில் பேசிய பத்திரிகையாளர் பிஸ்மி, இயக்குநர் சீனு ராமசாமி ‘இடம் பொருள் ஏவல்’ படப்பிடிப்பில் நடிகை மனிஷா யாதவுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் அவரைத் தரக்குறைவாக நடத்தியதாகவும் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் பக்கத்தில், ” ’ஒரு குப்பை கதை’ ஆடியோ விழாவில் எனக்கு மனிஷா நன்றி சொல்றாங்க. 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க. திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க” என பதில் போட்டார்.
இது இணையவெளியில் விவாதத்தை ஏற்படுத்த நடிகை மனிஷா இதற்கு விளக்கம் கொடுத்தார். '’ ‘ஒரு குப்பை கதை’ பட இசை வெளியீட்டு விழாவில் சீனு ராமசாமி மேடையில் அமர்ந்திருந்ததால் தான் எல்லாருக்கும் சொன்னது போல் அவருக்கும் நன்றி சொன்னேன். எதையும் மாற்ற முடியாது.
9 வருஷத்துக்கு முன்னாடி என்ன சொன்னேனோ அதில் உறுதியாக இருக்கிறேன். என்னிடம் தரக்குறைவாக நடந்துகொண்டவரிடம் நான் ஏன் மீண்டும் பணியாற்ற போகிறேன். உண்மை எதுவோ அதை சரியாகப் பேசுங்கள்” எனப் பதிவிட்டார்.
அத்துமீறலில் சீனு ராமசாமி
இதையடுத்து மீண்டும் யூடியூப் சேனலில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பிஸ்மி, மனிஷா யாதவ் மட்டுமில்லாமல் மேலும் சில நடிகைகளிடமும் இதுபோன்று பாலியல் அத்துமீறலில் சீனு ராமசாமி ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
“ ’நீர்ப்பறவை’ படத்தில் முதலில் பிக் பாஸ் பிரபலமான நடிகை பிந்து மாதவி தான் நடிக்க கமிட் ஆனார். ஆனால், சீனு ராமசாமியின் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் அவர் அப்படத்தில் இருந்து விலகியதாக கூறினார்.
இவர் மட்டுமல்லாது, வேறொரு நடிகைக்கும் சீனு ராமசாமி தொல்லை கொடுத்தார். அந்த நடிகைக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டதால் அவரின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை” என் பிஸ்மி அந்த வீடியோவில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
