உயிருக்கு ஆபத்து; கருத்து பதிவிட்ட இயக்குனர் அதிரடி கைது - மஞ்சு வாரியர் அளித்த புகாரில் கூறியிருப்பது என்ன?
மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குநர் சணல் குமார் சசிதரன் சமீபத்தில் சமூகவலைதளங்களில் புகார் அளித்திருந்தார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியர். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில் மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அவரை சிலர் காவலில் வைத்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் இயக்குநர் சணல் குமார் பதிவிட்டிருந்தார்.
மேலும், தனக்கு போலீஸில் இருந்து மிரட்டல் அழைப்பு வந்ததாகவும் மஞ்சுவின் நிலை குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிக்கும் ஜனாதிபதிக்கும் புகார் அளித்திருப்பதாகவும் ஃபேஸ்புக்கில் சனல் குமார் குறிப்பிட்டிருந்தார். இயக்குநரின் இந்த பதிவு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று மஞ்சு வாரியர் புகாரின் அடிப்படையில் சனல் குமார் நாகர்கோவில் அருகே தமிழக-கேரள எல்லைப் பகுதியான பாறசாலையில் சனல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நடிகை மஞ்சு வாரியர் எர்ணாகுளம் இளமக்கர காவல் நிலையைத்தில் அளித்த தனது புகாரில், தன்னைத் தொடர்ந்து சமூக ஊடகத்தில் அவமானப்படுத்தியதாகவும் தன் பெயருக்குக் களங்கும் விளைவிக்கும் வகையில் இடுகை இட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தான் போகும் இடத்துக்கெல்லாம் பின் தொடர்ந்து வந்து தொந்தரவு செய்வதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும் Manithan
ஈரானுக்குள்ளே மொசாட்டின் இரகசிய தளங்கள் : அரபு நாடுகளின் மீதான தாக்குதலின் பின்னணியில் யார்..! IBC Tamil