ஆன்மீகத்தை தேடிச் செல்லும் பிரபல இயக்குநர் - வைரலாகும் புகைப்படங்கள்
இயக்குநர் ரத்னகுமார் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைபவ்,பிரியா பவானி சங்கர், இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியான மேயாத மான் படத்தை இயக்கியவர் இயக்குனர் ரத்னகுமார். அந்த படத்தை தொடர்ந்து நடிகை அமலாபால் ஆடையின்றி நடித்து சர்ச்சையை கிளப்பிய ஆடை படத்தை இயக்கி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றி உள்ள ரத்னகுமார் இப்பொழுது தீவிர ஆன்மிகத்தில் ஈடுபட்டுள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ள ரத்னகுமார் அடுத்ததாக முன்னணி இயக்குனர் ஒருவரை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வெள்ளியங்கிரி மலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு கடவுளை தரிசித்தவாறு நடைபயணம் மேற்கொண்ட ஆன்மீக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.