'எவ்வளவு உயரப் பறந்தாலும்' வைரலான பேச்சு; திடீரென விலகிய ரத்னகுமார் - இதான் காரணமா?
இயக்குநர் ரத்னகுமார் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
ரத்னகுமார்
லியோ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மேயாத மான், ஆடை படத்தை இயக்கிய ரத்னகுமார் கலந்து கொண்டார். இவர் லியோ படத்தில் இணை எழுத்தாளராகவும் இருந்துள்ளார். அப்போது பேசிய ரத்னகுமார் "நான் விஜய்யுடன் இரண்டு படங்களில் பணியாற்றியிருக்கிறேன்.
அவர் எப்போதும் யாரையும் நிற்க வைத்து பேசமாட்டார். எல்லோரையும் சமமாகவே பார்ப்பார் என்று பேசினார். இதற்கும் மேலாக "எவ்வளவு உயரப் பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆகவேண்டும்" என்றார். ரத்னகுமாரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாக்கும் ரசிகர்கள்
முன்னதாக ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய கழுகு,காக்கா கதைக்கு பதிலடி கொடுத்து கலாய்க்கும் விதமாக ரத்னகுமார் அவ்வாறு பேசியதாக இணையவாசிகள் பேசி வருகின்றனர்.
மேலும் இந்த பேச்சுக்காக ரஜினி ரசிகர்கள் ரத்னகுமாரை சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து தாக்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று சமூக வலைதளத்தில் இருந்து விலகுவதாக ரத்னகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எழுதுவதற்காக ஆஃப் லைன் செல்கிறேன்.
என் அடுத்த பட அறிவிப்பு வரை சமூக வலைதளத்தில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கும் ஏராளமான ரஜினி ரசிகர்கள் ட்ரோல்கள் மூலம் ரத்னகுமாரை தாக்கி வருகின்றனர். அதில் "அடி வாங்க உடம்புல தெம்பில்ல போல.. அதான் ஓடுறான்" என்றெல்லாம் பதிவிட்டு வருகின்றனர்.
அடி வாங்க உடம்புல தெம்பில்ல போல....அதான் ஓடுறான்.
— Satheesh (@Satheesh_2017) November 2, 2023
உனக்கு காலம் பதில் சொல்லும் தம்பி. உன் ஆணவமே உன் அழிவுக்கு காரணமா இருக்கபோகுது காத்திரு.