பிரபல தமிழ் இயக்குநர் மாரடைப்பால் காலமானார் - திரைத்துறையினர் அதிர்ச்சி

Tamil Cinema Chennai Death
By Thahir Jan 24, 2023 02:04 AM GMT
Report

நடிகரும், இயக்குநருமான ராமதாஸ் மாரடைப்பால் காலமானார்.

சினிமாவில் அறிமுகம் 

1986 ஆம் ஆண்டு ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவ் ராமதாஸ்.

இதை தொடர்ந்து நடிகர் ராமராஜன் நடித்த ராஜா ராஜா தான், சுயம்வரம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். பின்னர் வசூல் ராஜா MBBS,யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை, தர்மதுரை, அறம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

Director Ramadoss passed away

இந்த நிலையில் ராமதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனிாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காலமானார்

அவருக்கு நேற்று இரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் உடல் கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.