ஸ்ருதி ஹாசனின் அந்த வீடியோ என் மொபைலில் ஓடிக்கிட்டே இருக்கும் - பகீர் கிளப்பிய ராஜமௌலி!

Shruti Haasan Tamil Cinema S. S. Rajamouli Tamil Actress Actress
By Jiyath Dec 23, 2023 04:15 PM GMT
Report

பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி நடிகை ஸ்ருதி ஹாசன் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர்  ராஜமௌலி

இந்திய திரையுலகில் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ராஜமௌலி. ஸ்டுடென்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து சத்ரபதி, மகாதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

ஸ்ருதி ஹாசனின் அந்த வீடியோ என் மொபைலில் ஓடிக்கிட்டே இருக்கும் - பகீர் கிளப்பிய ராஜமௌலி! | Director Rajamouli About Actress Shruti Haasan

இந்நிலையில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் இயக்கத்தில் சலார் என்ற திரைப்படம் கடந்த 22ம் தேதி வெளியானது. இதில் நடிகை பிரித்விராஜ், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் ராஜமௌலி கலந்து கொண்டார்.

ஸ்ருதி ஹாசன் நடனம்

அப்போது நடிகை ஸ்ருதி ஹாசன் குறித்து பேசிய அவர் " சலார் படத்தின் மீது எனக்கு ஒரே ஒரு புகார் உள்ளது. அது என்னவென்றால், ஸ்ருதி ஹாசனின் நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஸ்ருதி ஹாசனின் அந்த வீடியோ என் மொபைலில் ஓடிக்கிட்டே இருக்கும் - பகீர் கிளப்பிய ராஜமௌலி! | Director Rajamouli About Actress Shruti Haasan

சாரு ஷீலா, ரேஸ் குர்ரம் படங்களில் அவர் ஆடிய நடனத்தைத்தான் எனது ஃபோனில் மீண்டும் மீண்டும் போட்டு பார்ப்பேன். ஆனால் நீங்கள் படத்தில் எந்த ஒரு டூயட் பாடலையும் வைக்கவில்லை என்று கூறினீர்கள். அது எனக்கு ரொம்பவே ஏமாற்றமாக இருக்கிறது” என்கறார்.