விக்ரம் நல்ல நடிகர் எல்லாம் கிடையாது - பிரபல இயக்குநரின் பேச்சால் வெடித்தது சர்ச்சை
நடிகர் விக்ரம் குறித்து இயக்குநர் ராஜகுமாரன் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சீயான் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விக்ரம் திரைப்படங்களில் தனது கேரக்டர்களுக்காக தனது உடலை வருத்தி நடிப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. குறிப்பாக சேது, காசி, ஐ போன்ற படங்களில் அவரின் நடிப்பை கண்டு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் மிரண்டது என்றே சொல்லலாம்.
இதனிடையே நடிகர் விக்ரம் குறித்து இயக்குநரும், நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. யூடிப்பில் பிரபலமான சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜகுமாரன் தனது திரையுலக பணிகள் குறித்து பேசி வருகிறார்.
அந்த வகையில் விக்ரம் பற்றி பேசும் போது, விண்ணுக்கும் மண்ணுக்கு படப்பிடிப்பின் போது எனக்கும் விக்ரமுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் விக்ரம் அப்படத்தில் நடிக்க அதிக நாட்கள் கொடுத்ததினால் சம்பளம் கொஞ்சம் அதிகமாக எதிர்பார்த்தார். அதற்கு தயாரிப்பாளர்கள் தரப்பு இடம் கொடுக்கவில்லை.
இதனால் இந்த படத்தை பற்றி ஏதோ பேட்டியில் கேட்டபோது, I hate this film என கூறியிருந்தார். அது ஏன் என்று தெரியவில்லை. என்னதான் சேது படம் அவருக்கு திருப்புமுனையாக இருந்தாலும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் தான் அமைந்தது. மேலும் என்னை பொறுத்தவரை நடிப்பதென்றால் கையை உடைத்து, காலை உடைத்து, கண்ணை மாற்றி பார்த்து நடிப்பது நடிப்பு கிடையாது.
அவர் நல்ல நடிகர் எல்லாம் கிடையாது. ரஜினி அல்லது கமல் மாதிரி நடிப்பார் அவ்வளவு தான் இயக்குநர் ராஜகுமாரன் தெரிவித்துள்ள கருத்து விக்ரம் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.