23 வருஷம்.. இன்னும் பேசுறது இல்ல - நடிகை தேவயானி வீட்டில் இப்படி ஒரு பிரச்சனையா?
தனது மைத்துனர் நகுல் குறித்து நடிகை தேவயானியின் கணவர் ராஜகுமாரன் பேசியுள்ளார்.
நடிகை தேவயானி
தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தேவயானி. இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
தேவயானி சினிமாவில் பெரிய அளவில் பிரபலமாக இருக்கும்போது, இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தேவயானியின் தம்பி நடிகர் நகுல் இன்று வரை ராஜகுமாரனுடன் பேசுவதில்லையாம்.
ராஜகுமாரன் பேட்டி
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய ராஜகுமாரன் "என்னுடைய மைத்துனர் நகுல் என்னுடன் இன்னும் பேசுவது கிடையாது. நான் செய்தது துரோகமாக அவர் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார். என்னை தேசத்துரோக குற்றத்தில் சம்பந்தப்பட்டவனாகவே பார்க்கிறார்.
மாமியார் எல்லாரும் ஏற்றுக் கொண்டாலும் அவர் (நகுல்) மட்டும் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அது மட்டும் அல்லாமல் தேவயானியின் குடும்பத்தில் எல்லோரும் அவரவர் வாழ்க்கையில் தனியாக சென்று விட்டார்கள்.
தேவயானியின் இன்னொரு தம்பி புனேவில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவர் மட்டும் போனில் எப்பவாவது பேசுவார். எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களும், கலை உலகமும் தான் உறவுகள்" என்று தெரிவித்துள்ளார்.