விஜய்யின் நல்ல படமே சுமாராதான் இருக்கும்; இறங்கி அடிக்கிறது அஜித் தான் - பிரபல இயக்குநர் தாக்கு!
இயக்குநர் பிரவீன் காந்தி ரஜினி, அஜித், விஜய் குறித்து பேசியுள்ளார்.
பிரவீன் காந்தி
தமிழ் சினிமாவில் ரட்சகன், ஸ்டார், துள்ளல் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது அவர் ரஜினி, விஜய் அஜித் குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது "விஜய் சாரின் சுமாராக இருக்கும் படம் கூட வியாபார ரீதியாக தப்பித்திருக்கிறது. அவருக்கு ரொம்ப நல்லா ஓடின படமே என்னைக் கேட்டால் சுமாராதான் இருக்கும், கதையாக பார்த்தால். எனக்கு தெரிந்து விஜய்யின் இத்தனை வருட கேரியரில் நல்ல படம் என்று பார்த்தால் பூவே உனக்காக படம் தான்.
பேட்டி
ஆனால் கொண்டாடின படங்கள் நிறைய இருக்கிறது. இல்லைனா இன்றைக்கு அவர் நம்பர் ஒன்னில் இருக்க முடியாது அல்லவா. ஆனால் என்னைக்குமே ரஜினிதான் நம்பர் ஒன். இதில் இளைஞர் ரசிகர்கள் ரஜினி சாருக்கு குறைவு. விஜய்க்கு தமிழகம் முழுவதும் இளைஞர் ரசிகர்கள் உள்ளனர்.
அதனால் விஜய் நம்பர் ஒன் போன்று தெரிகிறார். ஆனால் வெளியில் தெரியாமல் சைலண்டாக இறங்கி அடிப்பது அஜித் தான். அவரும் நம்பர் ஒன்னில் தான் இருப்பார். இந்த மூன்று பேருக்குள் தான் இன்றைக்கு சினிமா இருக்கிறது" என்று பிரவீன் காந்தி பேசியுள்ளார்.