ஜெயிலரில் அந்த டயலாக் தனுஷ், ஐஸ்வர்யாவை நினைத்துதான் ரஜினி சொன்னார் - இயக்குநர் பளீச்!
ஜெயிலர் படம் குறித்து இயக்குனர் பிரவீன் காந்தி பேசியுள்ளார்.
ஜெயிலர்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராப், தமன்னா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரட்சகன், ஸ்டார், துள்ளல் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி ஜெயிலர் படம் வெற்றி பெற்றது குறித்து யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
பேட்டி
அப்போது பேசிய அவர் 'ஜெயிலர் படம் ஏன் இவ்வளவு பெரிய ஹிட் ஆனது என்றால், படத்தின் க்ளைமேக்சில் ரஜினி 'அப்பாக்கிட்ட ஏதாவது சொல்ல விரும்புரியாப்பா' என்ற டயலாக்கை 2,3 முறை பேசியிருப்பார். அதில் ஒரு வலி இருந்தது. அது வெறும் டயலாக் கிடையாது,அது ரஜினியுடைய வாழ்க்கை.
அந்த டயாலாகிற்கு பின்னல் அவர் தனுஷை மனதில் நினைத்திருக்கலாம். தனது மகள் ஐஸ்வர்யாவை மனதில் நினைத்திருக்கலாம். ஏனெனில் விவாகரத்து என்பது ஒரே இரவில் எடுத்த முடிவாகவா இருக்கும்? அது எவ்வளவு நாள் ரஜினியின் காதிற்கு வந்திருக்கும், அது குறித்து ரஜினியால் அவர்களிடம் கேட்கவும் முடியாது. எனவே ஜெயிலர் படத்தில் 'அப்பாக்கிட்ட ஏதாவது சொல்ல விரும்புரியா-மா.. என்ற டயலாக்கை படத்தில் ரஜினி பல முறை பேசியிருப்பார்.
அப்போது டாப் ஆங்கிளில் ரஜினி சிரிப்பதை காட்டுவார்கள். அந்த சிரிப்பு சினிமா கிடையாது. அந்த சிரிப்புக்கு பின்னால் தனுஷ் இருக்கிறார், அந்த சிரிப்புக்கு பின்னால் ஐஸ்வர்யா இருக்கிறார் என்று இயக்குனர் பிரவீன் காந்தி பேசியுள்ளார்.