3 கதைகள் இருக்கு ... விஜய்யை வைத்து படம் எடுக்க நான் ரெடி : ரெடியான பிரபல இயக்குநர்
நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்க தான் தயாராக இருப்பதாக பிரபல இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே,, இயக்குநர் செல்வராகவன் உட்பல பலரும் நடித்துள்ள படம் “பீஸ்ட்”. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியான பீஸ்ட் படம் மோசமான விமர்சனங்களால் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறாமல் போனது. இதனால் படத்தின் வசூலானது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
பீஸ்ட் படம் தோல்வி அடைய என்ன காரணம் என்று பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், விஜய்க்காக தான் 3 கதைகள் தயாராக வைத்திருப்பதாகவும், 2 வருடங்களாக அவரை பாஃலோ செய்து வருவதாகவும் பிரபல இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
மேலும் அவருக்கு இன்றைக்கு இருக்கும் மார்க்கெட் வேல்யூ, படத்தின் பட்ஜெட் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு எனக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் படம் இயக்க நான் ரெடி எனவும் பேரரசு கூறியுள்ளார்.
ஏற்கனவே பேரரசுடனான கூட்டணியில் விஜய்யின் சினிமா வரலாற்றில் முக்கிய வெற்றிப்படங்களான திருப்பாச்சி, சிவகாசி ஆகியவை வெளியானது குறிப்பிடத்தக்கது.
"நான் ரெடி - விஜய் சார் அழைத்தால் படம். விஜய் சார் காக 3 கதைகள் தயார் ?" - Director @ARASUPERARASU #Beast #BeastMovie #BeastModeON @actorvijay pic.twitter.com/XF4y4BeyT0
— Actor Vijay Team (@ActorVijayTeam) April 21, 2022

Ethirneechal: சூழ்ச்சியில் குணசேகரனையே தோற்கடித்த வீட்டு பெண்கள்... கதையில் எதிர்பாராத திருப்பம் Manithan
