விஜய் சார் அஜித் சார்.. ஒரு அரசியல் கதை சொன்னேன்; அதற்கு அவர் சொன்னது..பிரபல இயக்குநர் பேட்டி!

Jiyath
in பிரபலங்கள்Report this article
இயக்குநர் பேரரசு நடிகர் அஜித் மற்றும் விஜய் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் பேரரசு
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'திருப்பாச்சி' என்ற படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் பேரரசு. தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, பழனி, திருவண்ணாமலை என ஊர் பெயர்களை படத்தின் பெயராக வைத்து இயக்கியுள்ளார்.
நடிகர் விஜய்யை வைத்து 2 படங்களும், அஜித்தை வைத்து ஒரு படமும் பேரரசு இயக்கியுள்ளார். இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட இவர் பேசியதாவது "விஜய் சாரும் அஜித் சாரும் நல்ல நட்பில்தான் இருக்கிறார்கள்.
பேட்டி
அஜித் சார் சில வருடங்களுக்கு முன்னர் அவர், வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு என்னை அழைத்தார். விஜய் சாரும் இப்போதும் என்னுடன் தொடர்பில்தான் இருக்கிறார்.அவரை சந்தித்து கொண்டுதான் இருக்கிறேன். ’சர்கார்’ பட நேரத்தில் விஜய்யிடம் ஒரு அரசியல் கதை சொல்லினேன்.
ஆனால் "நான் தான் அரசியலுக்கு வரலையே.. வேணாம்" என்று சொல்லிவிட்டார். நாமும் கதை சொல்கிறேன் என்று அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்று இருக்கிறேன்" என்று பேரரசு பேசியுள்ளார்.