ஜெயிலரில் கிளப்பிய Mass-ஐ விட, நிஜத்தில் தெறிக்க விட்ட சிவராஜ்குமார் - பார்த்திபன் பாராட்டு!

Parthiban Prakash Raj Tamil Cinema Karnataka Actors
By Jiyath Sep 30, 2023 07:13 AM GMT
Report

சித்தார்த் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் கண்டனம் தெரிவித்த சிவராஜ்குமாருக்கு, பார்த்திபன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சித்தார்த் விவகாரம்

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'சித்தா' திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற்றது.

ஜெயிலரில் கிளப்பிய Mass-ஐ விட, நிஜத்தில் தெறிக்க விட்ட சிவராஜ்குமார் - பார்த்திபன் பாராட்டு! | Director Parthiban Praises Actor Sivarajkumar I

அப்போது கன்னட அமைப்பினர் கும்பலாக உள்ளே நுழைந்து "இங்கிருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் போகிறது, அதனை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம். இங்கே வந்து தமிழ் படம் பற்றி பேசிக் கொண்டிருப்பதா? என எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர். இதனால் நடிகர் சித்தார்த் தமது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதனையடுத்து சித்தார்த்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ் "ஒரு கன்னடனாகவும், கன்னடர்கள் சார்பாகவும் இதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், சாரி சித்தார்த் என்று" தனது ட்விட்டரில் பதிவிட்டார். மேலும், கன்னட நடிகர் சிவராஜ்குமார் "மற்றவர்களின் உணர்வுகளை நாம் எந்த வகையிலும் புண்படுத்தக் கூடாது.

ஜெயிலரில் கிளப்பிய Mass-ஐ விட, நிஜத்தில் தெறிக்க விட்ட சிவராஜ்குமார் - பார்த்திபன் பாராட்டு! | Director Parthiban Praises Actor Sivarajkumar I

கன்னட திரையுலகம் சார்பாக நாங்கள் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் சித்தார். இதை செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால் அதை கண்டு நாங்கள் மிகுந்த மனவருத்தம் அடைகிறோம், இனி இப்படி நடக்காது என்று பேசினார்.

பாராட்டிய பார்த்திபன்

இந்நிலையில் இதற்கு பாராட்டு தெரிவித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.  அதில் "‘ஜெயிலர்’படத்தில் கிளப்பிய Mass-ஐ விட,நிஜத்தில் இன்று கன்னடத்தில் கண்டனம் தெரிவித்து தெறிக்க விட்டு இருக்கும் நண்பர் திரு சிவராஜ்குமார் அவர்களுக்கும், சினிமாவில் மட்டுமே வில்லனாகவும் நிஜத்தில் முதல் ஹீரோவாகவும் குரல் எழுப்பிய நண்பர் திரு பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும் பாராட்டு !!!!

ஜெயிலரில் கிளப்பிய Mass-ஐ விட, நிஜத்தில் தெறிக்க விட்ட சிவராஜ்குமார் - பார்த்திபன் பாராட்டு! | Director Parthiban Praises Actor Sivarajkumar I

எதற்கு?மனதில் உள்ளதை தில் உள்ள மனிதர்களாக நேர்மையாக சொல்லி இருக்கிறார்கள். நீண்ட(கால)காவேரி பிரச்சனையை அதன் நீள அகலங்களில் அரசுகள் அலசி ஆராய்ந்து இன்னும் நீண்ட காலம் தீரா பிரச்சனையாக்கி அரசியல் செய்வதை விட்டு விட்டு,ஒரு கலைஞனை காயப் படுத்தி ஆவதென்ன?அவர்கள்….

எதிரிகளாக நினைக்கும் நம்மிடமிருந்து எதிர்ப்பு எழுவதை விட,அவர்கள் தெய்வமென மதித்த மறைந்த திரு ராஜ்குமார் அவர்களின் வம்சாவழியும்,அவர்கள் பெரிதும் நேசிக்கும் திரு சி.ரா.கு எதிர்ப்பையும் மன்னிப்பையும் வெளிபடுத்தும் போது,அநாவசியமாக அநாகரிகமாக நடந்துக் கொண்ட மிக சிலர் (அவர்கள் மட்டுமல்ல கர்நாடகா என்பது) திருந்த வாய்ப்புள்ளது. நீரின்றி அமையாது உலகு !-திருக்குறள்" என்று பதிவிட்டுள்ளார்.