விஜயகாந்தை இப்படி கஷ்டப்படுத்தாதீங்க; ரொம்ப வேதனை - பிரபல இயக்குநர் கோரிக்கை!

Vijayakanth Tamil nadu
By Sumathi Dec 15, 2023 10:09 AM GMT
Report

கேப்டன் விஜயகாந்த் குறித்து இயக்குநர் பாண்டிராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) தலைவரும் நடிகருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

vijayakanth health

தொடர்ந்து, அவரது உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டதாக வதந்திகள் பரவின. இந்நிலையில், அவர் உடல் நலம் பெற்றூ டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன்பின், திருவேற்காட்டில் தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

பொதுச்செயலாளரானார் பிரேமலதா விஜயகாந்த்..!! பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்..!!

பொதுச்செயலாளரானார் பிரேமலதா விஜயகாந்த்..!! பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்..!!

இயக்குநர் வேண்டுகோள்

இதில் விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்போது 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டார்.

தற்போது, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பாண்டிராஜ் தனது எக்ஸ் தளத்தில், “கேப்டன் திரு. விஜய்காந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை. அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள். please ...? பிடித்த ஒரு நல்ல மனிதரை இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமா இருக்கு” எனத் தெரிவித்துள்ளார்.