அந்த படத்துல அடிச்சுருவான் பாரு..! விஜய் சார் சொன்னாராம் - இயக்குநர் நெல்சன்!
இயக்குநர் நெல்சன் நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் நெல்சன்
கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தையும், விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார்.
ஆனால் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதில் அதிகமாக நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினியை வைத்து இயக்கிய ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நெல்சன், பீஸ்ட் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற போது, நடிகர் விஜய் எப்படி தன்னை கவனித்துக் கொண்டார் என்பது குறித்து பேசியுள்ளார்.
பேட்டி
அவர் பேசியதாவது "நீ வேணா பாரு அடுத்த படம் ஜெயிலரில் அவன் கண்டிப்பா அடிச்சுருவான் பாரு" என்று விடிவி கணேஷிடம் விஜய் சார் சொல்லியிருக்கிறார். விஜய் சார் நமக்கே தெரியாம நம்மள மோட்டிவேட் பண்ணுவாரு.
பீஸ்ட் படத்துக்கு நிறைய நெகட்டிவ் ரிவிவ் வந்ததுக்கு அப்பறம், நான் ஓக்கேவா இருக்கேனானு தெரிஞ்சுக்க விஜய் சார் அவரோட மேனேஜரை வச்சு எனக்கு பேச சொல்லுவாரு. விஜய் சாரே மெஸேஜ் பண்ணுவாரு. அவரு எனக்கு எப்போவும் போன் பண்ணி பேசிட்டுதான் இருப்பாரு.
நமக்கு இவ்வளவு நடக்கும்போது, விஜய் சார் "அது அப்படிதான் இருக்கும் இருக்கும், சரியாயிடும்னு எப்பவுமே பாஸிட்டிவா பேசுவாரு. பீஸ்ட் படம் ரிலீசாகி ஒரு மாசம் என்ன குளோசா பாத்துட்டு இருந்தார் விஜய் சார்" என்று நெல்சன் பேசியுள்ளார்.