பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய் சார் அதை சொன்னார்; எனக்கு கஷ்டமா இருக்கு - நெல்சன் ஓபன் டாக்!
பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய் என்ன சொன்னார் என்பது குறித்து நெல்சன் பேசியுள்ளார்.
இயக்குநர் நெல்சன்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் பலர் பாஸிட்டிவ் விமர்சனங்களை படத்திற்கு கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் இதற்கு முன் நெல்சன் விஜய்யை வைத்து இயக்கிய 'பீஸ்ட்' படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதில் அதிகமாக நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்றது. தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் பல நேர்காணல்களை கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் 'பீஸ்ட் படம் முடித்த பிறகு விஜய்யுடன் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்ததா? விஜய் என்ன சொன்னார்? என்று கேள்வி கேட்கப்பட்டது.
பேட்டி
அதற்குப் பதிலளித்த நெல்சன் 'வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், விஜய் சார் என்னிடம் சொன்னார் 'படம் எடுத்தோம் சில பேருக்கு பிடித்திருக்கிறது சில பேருக்கு பிடிக்கவில்லை. அதற்கு நாம் என்ன செய்ய முடியும். நேர்மையான முயற்சிதான் பண்ணினோம்.

என்னிடம் என்ன சொன்னியோ அதைத்தான் படமாக எடுத்த, எல்லாம் பண்ணிட்டோம் அதெல்லாம் முடிந்து விட்டது அவ்வளவுதான். அடுத்த முறை படம் பண்ணும்போது வேற மாதிரி பண்ணிக்கலாம் ' என்று விஜய் சார் என்னிடம் சொன்னார். அப்போது நான் விஜய்யிடம் கேட்டேன் 'சார் நீங்க என் மேல ஏதாவது கோவமா இருக்கீங்களா? என்று கேட்டேன்.
அதற்கு விஜய் சார் 'நான் எதுக்கு கோவமா இருக்கப்போறேன். அப்போ உனக்கும் எனக்கும் இருக்கும் பழக்கம் ஒரு படம் தானா..? இது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நீ இப்படி கேட்டது. இது இல்லன்னா இன்னொரு படம் பண்ணப் போறோம் அவ்வளவுதானே? என்று விஜய் சார் என்னிடம் சொன்னார் என்று நெல்சன் பேட்டியளித்துள்ளார்.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil