உங்க மனைவி உடையை நீங்க முடிவு செய்தாலும் தப்புதான் - சதீஷை விளாசிய இயக்குநர்
பெண் ஆடை குறித்து பேசிய நடிகர் சதீஷ்க்கு இயக்குநர் நவீன் பதிலடி கொடுத்துள்ளார்.
சதீஷ் கருத்து
சிந்தனை செய் பட இயக்குநர் யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபி முத்து உள்ளிட்டோர் நடித்துள்ள பட ஓ மை கோஸ்ட். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சன்னி லியோன், சதிஷ் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழாவில் மேடையில் பேசிய நடிகர் சதீஷ், வெளிநாட்டில் இருந்து வந்துள்ள நடிகை சன்னிலியோன் நமது கலாச்சாரப்படி சேலை அணிந்து வந்திருக்கிறார். ஆனால் நடிகை தர்ஷா குப்தா கோயம்புத்தூரை சேர்ந்தவராக இருந்தாலும் எப்படி உடை அணிந்து வந்துள்ளார்’’ என்று பேசினார்.
விளாசிய நவீன்
இதற்கு பல கண்டனங்கள் எழுந்த வண்னம் உள்ளது. பாடகி சின்மயி இதற்கு கண்டனம் தெரிவித்து தனது பதிவில், ‘‘இத்தனை பேர் உள்ள ஒரு பொது வெளியில் ஒரு பெண்ணின் ஆடை குறித்து சுட்டிக்காட்டி பேசுவது தவறு. இது ஒன்றும் காமெடி கிடையாது. ஆண்கள் இதுபோன்ற செயல்களை எப்போதுதான் நிறுத்துவார்கள்’’ என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘சன்னிலியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயம்புத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை.
சதீஷ் சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான். மாற்றமே கலாச்சாரம்’’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.