காட்சிகளை காவியமாக்கும் வித்தைகார{ன்}ர் மணிரத்னம்
மணிரத்னம் படம் என்றாலே படத்தில் காதல்,ரயில், மழை, கண்ணாடி,பஸ் டிராவல் வழியே காட்சியை நகர்த்துவது போன்ற சீன்கள் எப்போதும் இருப்பவை.
அஞ்சலிக்கு பிறகு சூப்பர் ஸ்டார்களான ரஜினி, மம்முட்டி வைத்து மகாபாரத கதையின் கேரக்டர்களை கொண்டு உருவான ‘தளபதி’யின் காட்சிகள் இன்றும் ரசிகர்களின் அபிமானத்திற்குரியது.
சொல்லப்போனால் தளபதி வரை அவரின் படங்களுக்கு இசைஞானி இளையராஜா தான் இசை மொழி கொடுத்திருப்பார் .
பின்னர் அவர்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடு தமிழ் சினிமாவில் மற்றொரு இசை வடிவத்தை உலகறிய வைத்தது.அடுத்த படமான ‘ரோஜா’வில் ‘ஏ.ஆர்.ரஹ்மான்’-ஐ அறிமுகப்படுத்தினார்.
மணியின் படங்கள் வெற்றிக்கு காரணம் கதைக்களங்கள். அன்று நிலவும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் அல்லது கலாச்சார பதிவுகளை வெளிப்படுத்தியிருக்கும்.
காலமாற்றத்துக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் உயிரினங்களே நீடித்து வாழும் என்பது பரிணாமவியல் கோட்பாட்டின் அடிப்படை விதிகளில் ஒன்று. திரைத் திறையில் அதற்கும் வாழ்வும் எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் மணிரத்னம்.
அலைபாயுதே' ஒரு சாதாரண காதல் கதையைச் சொன்ன படம்தான்.அதில் கார்த்திக் , ஷக்தி இருவரின் கதாபாத்திரம் தான் கதையை நகர்த்தும்
. முதலில் எந்தப் பொறுப்புமில்லாமல் ஷக்தியைக் காதலிப்பதை மட்டுமே வேலையாக வைத்திருக்கும் கார்த்திக்,திருமணம் முடிந்ததும் வேலையே கதி என்றிருப்பான்.

ஷக்திக்கோ, அவன் அவள் மீது கொண்டிருக்கும் காதல் குறைந்துவிட்டதாகவும், வேறு பெண்ணைத் தேடுகிறான் என்றும் கவலை. கதை இறுதிக்கட்டத்தை அடையும்போது, கார்த்திக் தன் தொழிலில் வெற்றியடைகிறான்.
இந்த நேரத்தில் நிகழும் சாலை விபத்து கார்த்திக்கையும், ஷக்தியையும் தற்காலிகமாகப் பிரித்து, மீண்டும் இணைக்கிறது.
இவர்களை இணைக்கும் பாலமாக இருப்பது அரவிந்த்சாமி - குஷ்பு தம்பதி. அவர்களின் விட்டுக்கொடுத்துச் செல்லும் தன்மையைக் கண்டு உண்மையான காதலை உணர்கிறான் கார்த்திக்.
இதே தழுவலில்தான் ஓ காதல் கண்மணி' படத்தின் இறுதிக் காட்சியையும் வடிவமைத்திருப்பார், மணிரத்னம்.
பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன் தம்பதியைப் பார்த்து காதல் என்றால் என்னவென்பதை உணர்ந்து ஆதியும் தாராவும் தங்கள் வாழ்வுக்கான முடிவை எடுப்பார்கள்.
இந்த இரண்டு படங்களுக்கும் இடையே மணிரத்னம் தன்னைக் காலத்துக்கு ஏற்றவாறு எப்படிப் புதுமைபடுத்திக்கொண்டார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
ஆனால் ஒன்று தனது படத்தில் பேச்சு, உடைகள், வாழ்க்கை முறை என எல்லாம் மாறியிருக்கும், மணிரத்னத்தின் கதை சொல்லும் முறையைத் தவிர.
இதேபோல அவருடைய இரண்டு ஆக்ஷன் படங்களை ஒப்பிட்டுப் பார்த்தாலும் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
மணிரத்னம். `நாயகன்', `செக்கச் சிவந்த வானம்' இரண்டுமே ஒரு பெரிய டான் கதைதான்.
ஆனால், களங்கள் மாறுகின்றன. நாயகன் படத்தில் டான் வேலு நாயக்கர் படத்தின் பெரும்பாலான காட்சிகள் அவருடைய பொதுவாழ்க்கையைப் பற்றியே இருக்கும்.

ஆனால் சேனாபதி செக்கச் சிவந்த வானம் படத்தின் கதை குடும்பத்துக்குள் நடக்கும் வாரிசுப் பிரச்னை. அமைந்திருக்கும். இதில் சேனாபதி எப்படி டான் ஆனார் என்பதெல்லாம் படத்தில் விளக்கிச் சொல்லப்பட்டிருக்காது.

ஆனால், இரண்டு படங்களிலுமே கதாபாத்திரங்களின் மன ஓட்டம்தான் படத்தைனை பயணிக்க வைக்கும் .
`நாயக'னில் வேலு நாயக்கரை ஒரு காவல் துறை அதிகாரியின் மகன் பழிவாங்கும் எண்ணத்தில் சுட்டுக் கொல்வதாக கதை முடிவடையும். அதேபோல, `செக்கச் சிவந்த வான'த்தில் ஒரு காவல் துறை அதிகாரி ரசூல் ஒரு டானின் சாம்ராஜ்ஜியத்தையே முடித்துவைப்பான்.
இரண்டு படங்களிலும் இப்படி முடிவு ஒன்றாக இருந்தாலும், நோக்கம் வெவ்வேறாக இருக்கும்.
தன்னுடைய மற்ற படங்களில் சில விசித்திரமான பாத்திரப் படைப்புகளையும் செய்திருக்கிறார், மணிரத்னம். ஆய்த எழுத்தில் வரும் பாரதிராஜா
குரு மிதுன் சக்ரவர்த்தி 'ராவணன்' விக்ரம் உள்ளிட்ட பல பாத்திரங்களை வடிவமைத்த விதங்களே வித்தியாசம்தான். ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடைத்து கெட்டவரா, நல்லவரா என்பதை விளக்காமல், அதை வைத்தே கதை சொல்லியிருப்பார்.
மணிரத்னத்தின் பல படங்கள் தீவிரவாதம். மதக் கலவரம், பிரிவினைவாதம், இலங்கை தமிழர் பிரச்சினை உள்ளிட்ட அரசியல் பிரச்சினைகளைப் பேசும்.
அதே சமயம் மணிரத்னம் என்றைக்குமே தன்னை சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வளிப்பவராகவோ அரசியல், கருத்தியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த படைப்பாளியாகவோ தன்னை முன்வைத்துக் கொண்டதில்லை.
மணிரத்தினம் என்றுமே தன்னை வெகுஜன சினிமா இயக்குநராகவே அடையாளப்படுத்திவந்துள்ளார்.
சினிமாவுடன் அடையாளப்படுத்தப்படும் பாடல்கள், கனவுக் காட்சிகள், காதலுக்கு அளிக்கப்படும் அளவு கடந்த கற்பனாவாத முக்கியத்துவம் இவரது படத்தில் அறிது .

ஆனால் இது குறித்த கேள்விகளை பத்திரிக்கையாளர்கள் அவரிடம் இப்ப்போது உள்ள படங்களில் ஏன் காதலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது தமிழ் சினிமா” என்று கேட்டபோது “அது உண்மைதான்.
ஆனால் அதில் என்ன தவறு இருக்கிறது. காதல் அழகானதுதானே” என்று பதில் சொன்னார்.
தற்போது மணி ரத்னம் தன் நீண்ட நால் கனவுப் படைப்பான 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.
பொன்னியின் செல்வன் வெற்றிகரமாக முடிப்பதோடு அதற்குப் பிறகும் ஒரு இயக்குநராக பல புதிய சாதனைகளை மணிரத்னம் நிகழ்த்துவர். ஏன் என்றால் அவர் காட்சிகளை காவியமாக்கும் வித்தைகார{ன்}ர் மணிரத்னம்..