'பென்சில்' பட இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி
'பென்சில்' பட இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சினிமாத்துறையில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
‘பென்சில்' படம்
ஜி. வி. பிரகாஷ்குமார் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு 'பென்சில்' திரைப்படம் வெளியானது. இப்படத்தை இயக்குநர் மணி நாகராஜ் இயக்கினார். இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் ஸ்ரீதிவ்யா, ஊர்வசி, விடிவி கணேஷ், டிபி கஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
பென்சில் படத்தையடுத்து, ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ படத்தை இயக்கி வந்தார் இயக்குநர் மணி நாகராஜ். இப்படத்தில் ‘நீயா நானா’ கோபிநாத், அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுதார், சீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இயக்குநர் மணி நாகராஜ் மரணம்
இந்நிலையில், இன்று இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இளம் இயக்குநர் மணி நாகராஜின் திடீர் மரணம் திரைத்துறையினரை பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவிற்கு பல திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Director of #VasuvinGarbinigal, Mr. Mani Nagaraj passed away this morning due to cardiac arrest.
— sridevi sreedhar (@sridevisreedhar) August 25, 2022
May his soul rest in peace pic.twitter.com/OWhLT1n5PL