Friday, May 30, 2025

'அவர் அதை பண்ணுவாரு' - அந்தளவு டெடிகேஷனை கனவில் கூட நினைக்கவில்லை - லோகேஷ் கனகராஜ்!

Vijay Tamil Cinema Lokesh Kanagaraj Sanjay Dutt
By Jiyath 2 years ago
Report

லியோ திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் சஞ்சய் தத் குறித்து பேசியுள்ளார். 

லியோ திரைப்படம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து பாடல்களும் வெளிவந்து ஹிட் அடித்தது. மேலும் சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

வரும் 19ம் தேதி லியோ திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் 'சஞ்சய் தத்' குறித்து பேசியுள்ளார்.

பேட்டி

அவர் பேசியதாவது "கதை சொல்லி முடித்ததும் சஞ்சய் தத் அவ்வளவு சந்தோஷப்பட்டார். கிட்டத்தட்ட 270 படம் நடித்துள்ளார். ஈசியாக 'டயலாக்கை நான் லிப் செய்கிறேன் நீங்கள் சிங்க் செய்துகொள்ளுங்கள்' என்று அவர் போயிருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை.

எல்லா நாளும் மாலையில் டயலாக்கை வாங்கிக்கொண்டு போயி, டியூஷன் படிக்கும் பையன் மாதிரி என்னுடைய ஆஸிஸ்டென்சுடன் உட்கார்ந்து தமிழில் ஒவ்வொரு லிப் சிங்கும் பண்ணிவிட்டு அதை போனில் ரெக்கார்ட் செய்து எனக்கு அனுப்பி, இந்த உச்சரிப்பு சரியாக இருக்கிறதா என்று என்னிடம் கேட்ட பிறகுதான் தூங்குவார். சில நாள் அதிகாலை 3 மணி வரை கூட ப்ரிப்பேர் பண்ணுவார்.

அதற்கு பிறகு காலை செட்டுக்கு வந்துவிடுவார். இந்த அளவு டெடிகேஷன் எல்லாம் நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை" என்று லோகேஷ் கனகராஜ் சஞ்சய் தத் குறித்து பேசியுள்ளார்.