பாலியல் வழக்கில் பிரபல இயக்குனர் அதிரடி கைது - திரையுலகினர் அதிர்ச்சி..!
பாலியல் வழக்கில் பிரபல இயக்குனர் லீஜு கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.
சமீபகாலமாக பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது.அதிலும் சினிமாத்துறையில் நாளுக்கு நாள் பாலியல் தொல்கள் அதிகரித்து வருகின்றன.
ஹாலிவுட் முதல் கோலிவுட் வரையிலான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
அண்மையில் மீ டூ விவகாரம் பெரம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே பிரபல இயக்குனர் ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரைத்துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல மலையாள இயக்குனரான லீஜு கிருஷ்ணா தன்னிடம் பணியாற்றிய பெண்ணிற்கு கடந்த ஆறு மாதகாலமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக போடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இயக்குனர் லீஜு கிருஷ்ணா அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி ஆறு மாதகாலமாக பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் கேரளாவில் கண்ணுரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
பெண் அளித்த புகாரில் இயக்குனர் லீஜு கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.தற்போது கைது செய்யப்பட்ட
இயக்குனர் லீஜு மலையாளத்தில் நிவின் பாலி மற்றும் மஞ்சு வாரியார் நடிக்கும் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இயக்குனர் கைதானதால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.