பிரபல தமிழ்பட இயக்குநரின் மனைவி மரணம் - திரையுலகினர் இரங்கல்

directorkothandaramaiah directorkr
By Petchi Avudaiappan Sep 24, 2021 05:43 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமானவர் கேயாரின் மனைவி இந்திரா உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழில் ஈரமான ரோஜாவே, இரட்டைரோஜா , மாயாபஜார், அலெக்சாண்டர், காதல் ரோஜாவே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கேயார் தயாரிப்பாளராகவும், திரைப்பட விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார். மேலும் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

இதனிடையே சிறுநீரகக் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேயாரின் மனைவி இந்திரா இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். கேயார் - இந்திரா தம்பதியருக்கு ஒரு மகனும் 3 மகள்களும் உள்ளனர். அவருடைய இறுதிச் சடங்கு நாளை (25 ஆம் தேதி) மாலை , தேனாம்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திராவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.