உறவை பிரிந்த இயக்குனர் ஹரி!! விஜயகுமார் வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகம்!!
நடிகர் விஜயகுமாரின் மருமகனும் பிரபல இயக்குனருமான ஹரியின் தந்தை கோபாலகிருஷ்ணன் இன்று வயது மூப்பின் காரணமாக காலமானார்.
இயக்குனர் ஹரி
விக்ரமின் சாமி, சூர்யாவின் சிங்கம் படங்கள், சரத்குமாரின் ஐயா விஷாலின் தாமிரபரணி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஹரி. கமர்சியல் சினிமாவில் தனிக்கென தனி ஃபார்முலாவை உருவாக்கி தொடர் வெற்றியை கொடுத்து வரும் இவர் தற்போது விஷாலின் நடிப்பில் படம் ஒன்றை இயக்கி வருகின்றார்.
பெரும் பிரபலமான இயக்குனரான இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு நடிகையும், பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான ப்ரீத்தா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார். ஹரியின் படங்களில் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார் விஜயகுமார்.
தந்தை காலமானார்
கடைசியாக ஹரியின் இயக்கத்தில் வெளியான யானை படம் நடிகர் அருண் விஜய்க்கு நல்ல மாஸ் வெற்றி படத்தை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனரை ஹரியின் தந்தை வி.ஆர்.கோபாலகிருஷ்ணன் வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார்.
அவரின் வயது 88 ஆகும்.
இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று மரணமடைந்துள்ளார். தூத்துக்குடியில் மளிகை கடை நடத்தி வந்த இவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளதாக கூறப்படுகிறது.