பிரபல தமிழ்ப்பட இயக்குநர் மரணம் - அதிர்ச்சியில் பிரபலங்கள்
நடிகர்கள் அர்ஜூன், பார்த்திபன் ஆகியோரின் படங்களை இயக்கிய இயக்குநர் சி.வி. சசிகுமார் மாரடைப்பால் காலமானார்.
அர்ஜுன், மீனா, ரம்பா உள்ளிட்டோர் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியான செங்கோட்டை படத்தை இயக்கியவர் சி.வி. சசிகுமார். அந்த படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்ததை தொடர்ந்து பார்த்திபன் நடித்த உன்னை வாழ்த்தி பாடுகிறேன் படத்தையும் இயக்கியிருந்தார்.
இதனிடையே புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த சசிகுமார் நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது மரண செய்தி அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
படங்கள் தவிர்த்து சன் டிவியில் ஒளிபரப்பான மகாபாரதம் சீரியலின் சில எபிசோடுகளை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.