இப்படி ஒரு படம் நடிக்க ரஜினிக்கு தைரியம் இருக்கா? - பிரபல இயக்குநர் கேள்வியால் அதிர்ச்சி

Ram Gopal Varma pushpa actorrajinikanth Alluarjun
By Petchi Avudaiappan Dec 07, 2021 05:45 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இருக்கும் தைரியம் ரஜினிகாந்துக்கு இருக்கிறதா? என பிரபல இயக்குநர் கேள்வியெழுப்பியுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இப்படி ஒரு படம் நடிக்க ரஜினிக்கு தைரியம் இருக்கா? - பிரபல இயக்குநர் கேள்வியால் அதிர்ச்சி | Director Criticize Actor Rajinikanth

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா,ஃபகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். சுகுமார் இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, என மொத்தம் ஐந்து மொழிகளில் உருவாகி உள்ளது.

புஷ்பா படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் மிரட்டலான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே நேற்றைய தினம் வெளியாகியுள்ள இந்தப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த டிரைலர் குறித்து பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது போன்று தத்ரூபமாக அச்சமின்றி நடிக்க அல்லு அர்ஜுன் என்ற ஒரே ஒரு சூப்பர் ஸ்டாரால் மட்டுமே முடியும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பவன் கல்யான், மகேஷ் பாபு, சிரஞ்சீவி, ரஜினிகாந்த் ஆகியவர்களால் இதுபோன்றோ அல்லது இதற்கு மேலும் நடிப்பதற்கு தைரியம் இருக்கிறதா? என்றும் குறிப்பிட்டுள்ளார்.சர்ச்சைகளுக்கு பெயர் போன ராம் கோபால வர்மாவின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த், மகேஷ் பாபு, பவன் கல்யாண் ரசிகர்கள் தற்போது ராம் கோபால் வர்மாவை விமர்சித்து வருகின்றனர்.