2 நாட்களில் திருமணம்; தயக்கமே இல்லாமல் முதல் நாள் எனக்காக அதை செய்தார் மீனா - பிரபல நடிகர் சொன்ன சீக்ரட் !

Cheran Meena Tamil Cinema Tamil Actress
By Jiyath Aug 02, 2023 11:08 AM GMT
Report

இயக்குநர் மற்றும் நடிகர் சேரன் மீனா குறித்த நெகிழ்ச்சியான நிகழ்வைப்பற்றி பேசியுள்ளார்.

நடிகை மீனா

90ஸ் களில் கனவுக் கன்னியாக வளம் வந்தவர் நடிகை மீனா. 1982ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சிவாஜி நடித்த நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் முதன் முறையாக நடித்தார் . 1990ல் ஒரு புதிய கீதை என்ற தமிழ் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

2 நாட்களில் திருமணம்; தயக்கமே இல்லாமல் முதல் நாள் எனக்காக அதை செய்தார் மீனா - பிரபல நடிகர் சொன்ன சீக்ரட் ! | Director Cheran About Actress Meena Dubbing

ரஜினி,கமல்,அஜித்,விஜய் என அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். இவரும் ரஜினியும் இனைந்து நடித்த முத்து என்ற படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. ஜப்பானிலும் வெளியாகி அங்குள்ள ரசிகர்களையும் கவர்ந்தார் மீனா.

தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கடைசியாக 2021ல் ரஜினியின் அண்ணாத்த என்ற படத்தில் நடித்திருந்தார்.

சேரன் நெகிழ்ச்சி

இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் நடத்தும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சேரன் " பொக்கிஷம் என்ற படம் எடுத்தேன். அந்த படத்தில் நடிகை பத்ம பிரியா நடித்திருந்தார். அவருக்கு அவ்வளவு தமிழ் உச்சரிப்பு வராது. இந்த படம் முழுக்க கடிதம் பற்றியது. அதனால் கவிதை நடையில்,இலக்கிய நடையில் பேசவேண்டும். தமிழ் நன்றாகப் பேசக்கூடிய உச்சரிக்க கூடிய ஒரு குரல் தேவைப்பட்டது.

2 நாட்களில் திருமணம்; தயக்கமே இல்லாமல் முதல் நாள் எனக்காக அதை செய்தார் மீனா - பிரபல நடிகர் சொன்ன சீக்ரட் ! | Director Cheran About Actress Meena Dubbing

அதற்காக நான் தேடிக்கொண்டிருந்தேன். நிறைய டப்பிங் ஆர்டிஸ்டுகளை வராகி சொல்லி டெஸ்ட் எடுத்தேன் ஆனால் யாருக்கும் அவ்வளவு அழகான தமிழ் பேச வரவில்லை. யாரை பேசவைக்கலாம் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன் அப்போது தான் நடிகை மீனா நினைவில் வந்தார்கள். இதற்கு மீனாவின் குரல் அட்டகாசமாக இருக்குமே என்று தோன்றியது. ஆனால் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை அவரிடம் எப்படிப் பொய் கேட்பது என்ற தயக்கம் இருந்தது.

அனால் அவர்கள் ஏற்றக்கொள்வார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. அதில் என்ன சிக்கல் என்றால் இன்னும் இரண்டு நாட்களில் மீறீனாவுக்கு கல்யாணம். இந்த நேரத்தில் டப்பிங் செய்து கொடுக்க சொன்னால் திட்ட மாட்டார்களா என்று நானே நினைத்தேன். அப்போது மீனாவின் அம்மாவிற்கு போன் செய்தேன். அவர் மீனாவிடம் போன் கொடுத்தார். போனை எடுத்தவுடன் மீனா என்னிடம் "சொல்லுங்க சேரன்" என்றார். நான் நீங்கள் என் படத்திற்கு டப்பிங் பேசிக் கொடுக்க வேண்டும் என்று சொன்னேன்.

2 நாட்களில் திருமணம்; தயக்கமே இல்லாமல் முதல் நாள் எனக்காக அதை செய்தார் மீனா - பிரபல நடிகர் சொன்ன சீக்ரட் ! | Director Cheran About Actress Meena Dubbing

உடனே மீனா எங்கே டப்பிங்? என்று கேட்டார். நான் இடத்தை சொன்னேன். உடனே நான் நாளை வருகிறேன் என்று மீனா சொன்னார். கல்யாணத்திற்கு முதல் நாள் மாலை வந்து யாருமே பேச முடியாத, பேச மறுத்த அந்த முழுப்படத்தின் தமிழ் வசனங்களையும் ஒரே நாளில் பேசி கொடுத்துவிட்டு போனார் மீனா என்று மீனாவை இயக்குனர் சேரன் புகழ்ந்து தள்ளியுள்ளார்.