இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் உயிரிழப்பு!

Manoj Bharathiraja Tamil Cinema Heart Attack Bharathiraja
By Vidhya Senthil Mar 26, 2025 02:55 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in சினிமா
Report

இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் 48 வயதில் காலமானார்.

மகன் மனோஜ் 

பாதிராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தின் மூலம் அவரது மகன் மனோஜ் திரையுலகில் அறிமுகமானார்.அவருக்கு ஜோடியாக ரியா சென் நடித்து இருந்தார்.

இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் உயிரிழப்பு! | Director Bharathirajas Son Manoj Passes Away

ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்த படத்தில் அனைத்து பாடல்களும் மெகா ஹிட்டாக அமைந்தது. இதை தொடர்ந்து கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜூனா , உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தார்.

இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்னர் இதய அறுவை சிகிச்சை செய்த இவர் வீட்டில் ஓய்வில் இருந்தார். கடந்த சில நாட்களாக இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு இருந்த நிலையில் இன்று மாராடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.