உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக பாரதிராஜா: வெளியான புகைப்படம்
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவர் பாரதிராஜா, கடந்தாண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடுமையான நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டதன் காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பாரதிராஜாவின் குடும்பத்தினரை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பாரதிராஜாவை நலம் விசாரிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அடையாளம் தெரியாத அளவுக்கு உடல்மெலிந்து இருக்கும் அப்புகைப்படத்தை பெண் மருத்துவர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
அதில், இயக்குநர் இமயம் பாரதிராஜா சார் அவர்களின் மருத்துவக் குழுவில் இடம்பெற்றதை பெறும் பாக்கியமாக கருதுகிறேன், நான் எனது மருத்துவப் பணியைத் தொடங்கிய பிறகு, நான் கவனித்துக் கொண்ட முதல் நோயாளி அவர்தான். பாரதிராஜா சார் இப்போது நலமாக உள்ளார். விரைவில் வீட்டிற்குச் செல்லவும் தயாராகிவிட்டார் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
