இயக்குனர் பாக்யராஜ் காலமானார்

Bhagyaraj
By Fathima Jun 27, 2026 04:29 AM GMT
Report

மாரடைப்பு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் கே.பாக்யராஜ் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

1979ம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பாக்யராஜ், தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கிய இவர் நடிகராகவும் ஜொலித்தார்.

கதை, திரைக்கதை, இயக்கம், நடிகர், வசன ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞர் பாக்யராஜ். நகைச்சுவையுடன் குடும்ப பாங்கான கருத்துகள் கொண்ட இவரது படைப்புகள் இன்று மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளன.

பிலிம்பேர் விருதுகள், தமிழ்நாடு அரசின் விருதுகள் என பல பாராட்டுகளையும் சொந்தமாக்கி கொண்டவர்.