மோசமாக நடந்து கொண்ட இயக்குனர் பாலா - பகீர் தகவலால் பரபரப்பு!
தயாரிப்பாளரை அலுவலகத்தில் இருந்து துரத்தி இயக்குனர் பாலா மோசமாக நடந்துக் கொண்டுள்ளார்.
பிதாமகன் திரைப்படம்
விக்ரம் - சூர்யா உள்ளிடோர் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான பிதாமகன் திரைப்படத்தை எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் சார்பில் பி.ஏ.துரை என்பவர் தயாரித்திருந்தார். அந்த திரைப்படத்தை பாலா இயக்கி ஹிட் அடித்தது.
அந்தப் படப்பிடிப்பின் போது, தயாரிப்பாளர் வி.ஏ. துரை, மீண்டும் ஒரு திரைப்படத்தை தனக்கு இயக்கிக் கொடுக்குமாறு இயக்குநர் பாலாவிற்கு 25 லட்ச ரூபாய் முன் தொகை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதற்குப் பிறகு பாலா மற்றும் வி.ஏ.துரை ஆகியோர் இணைந்து பணியாற்றவில்லை.
தயாரிப்பாளர் போராட்டம்
இந்த நிலையில், 19 ஆண்டுகளுக்கு பிறகு தான் கொடுத்த முன் தொகையை திருப்பிக் கொடுக்குமாறு நேற்று தயாரிப்பாளர் வி.ஏ.துரை, இயக்குநர் பாலா அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் அங்கு அவருக்கு முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக பாலா அலுவலகத்தில் அவர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளார். இரவு 10 மணி ஆனபோதும் அவர் அலுவலகத்தில் இருந்து கிளம்பவில்லை. இந்த நிலையில் இயக்குநர் பாலா அலுவலக ஊழியர்கள் வி.ஏ.துரையை அலுவலகத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.
இருந்த போதிலும் இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் பிரச்சனையை முடித்துக் கொடுப்பதாக வி.ஏ. துரைக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது.