அவளை நினைத்து நான் வேதனைப்படுகிறேன்... - மனதளவில் உடைந்த பாலா... - ரசிகர்கள் வேதனை

divorce muthumalar விவாகரத்து பாலா முத்துமலர் director-bala
By Nandhini Apr 12, 2022 08:32 AM GMT
Report

‘நந்தா’, ‘பிதாமகன்’, உள்ளிட்ட பல முக்கிய படங்களை இயக்கியவர் பிரபல இயக்குநர் பாலா. இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பங்கு இயக்குநர் பாலாவிற்கு உண்டு. சினிமாத்துறையுலகில் கடந்த சில மாதங்களாக முக்கிய பிரபலங்கள் விவாகரத்து செய்து வருகிறார்கள்.

இதனிடையே பாலா தனது மனைவி முத்துமலரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியாக்கியது.

கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த இவர்கள், கடந்த 5ம் தேதி இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர்.

கடந்த 2004ம் ஆண்டு மதுரையில் திருமணம் செய்து கொண்ட இயக்குநர் பாலாவும், முத்துமலரும் 17 வருட வாழ்க்கையிலிருந்து பிரிந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இயக்குநர் பாலா விவாகரத்து குறித்து சமூகவலைத்தளங்களில் பல தகவல் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது பாலா குறித்து ஒரு விஷயம் வெளியாகி உள்ளது.

விவாகரத்திற்கு பிறகு முத்துமலரை நினைத்து புலம்பிய பாலா தற்போது அந்த விஷயத்திலிருந்து வெளியே வந்துவிட்டார். தற்போது நடிகர் சூர்யாவை வைத்து கன்னியாகுமரியில் படமெடுத்து வருகிறார்.

இப்படம் வெற்றிப்படமாக அமையும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது. விவாகரத்துக்கு பிறகு பாலாவின் மகள் அவரது அம்மா முத்துமலருடன் உள்ளார்.

படப்பிடிப்பில் எதையோ பறிகொடுத்ததுபோல் இருக்கும் பாலா, மகளை நினைத்து வருத்தத்தில் உள்ளாராம். எனக்கு 2-வது திருமணம் வேண்டாம். இனி என் மகள் தான் முக்கியம், அவள் மட்டும் இனி போதும். என் மகளின் எதிர்காலம் தான் எனக்கு முக்கியம் என்று கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அவளை நினைத்து நான் வேதனைப்படுகிறேன்... - மனதளவில் உடைந்த பாலா... - ரசிகர்கள் வேதனை | Director Bala Muthumalar Divorce