Sunday, May 25, 2025

இயக்குநர் பாலாவுடன் மீண்டும் இணைய விரும்புகிறாரா முத்துமலர்? - வெளியான முக்கிய தகவல்..!

Director Bala Divorced Talk விவாகரத்து Muthumalar முத்துமலர் இயக்குநர்பாலா
By Thahir 3 years ago
Report

இயக்குநர் பாலா தன்னை நன்றாக பார்த்து கொண்டதாக என அவரது முன்னாள் மனைவி முத்துமலர் புலம்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாலா.சேது,நந்தா,பிதாமகன்,உள்ளிட்ட பேசும் படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

இந்நிலையில் இயக்குநர் பாலா தன் மனைவியை கடந்த மாதம் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றார். இயக்குநர் பாலா கடந்த 2004 ஆண்டு மதுரையில் முத்துமலரை திருமணம் செய்து கொண்டார்.

தன் மனைவியை பிரிந்த நிலையில் இயக்குநர் பாலா திரைப்படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்குநர் பாலா திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குநர் பாலாவை பிரிந்த அவருடைய முன்னாள் மனைவி முத்துமலர் தன்னை இயக்குநர் பாலா நன்றாக பார்த்து கொண்டாதாகவும்,யார் கண் பட்டதோ இப்படி ஆகி விட்டது எனக் கூறி புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இயக்குநர் பாலா தனக்கு மகள் மட்டும் போதும் அவர் தான் தன்னுடைய எதிர்காலம் என கூறியுள்ளார்.

அவர் தனக்கு இரண்டாவது திருமணம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.