விஜய் பட நடிகையை அடித்த விவகாரம் - இயக்குநர் பாலா விளக்கம்
மமிதா பைஜூவை இயக்குநர் பாலா அடித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் அதற்கு விளக்கமளித்துள்ளார்.
பாலா
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் வணங்கான் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த நிலையில் சூர்யா இந்த படத்திலிருந்து விலகினார். மேலும் இந்த படத்தில் மமிதா பைஜூ நடித்து வந்தார்.
மமிதா பைஜூ
மமிதா பைஜூ மலையாள நடிகை என்பதால் படத்தில் அதிக டேக் வாங்கியதாகவும், இதனால் பாலா அவரை அடித்ததாகவும் சர்ச்சைகள் கிளம்பியது. ஆனால் பாலா தன்னை அடிக்கவில்லை என மமிதா பைஜூ விளக்கமளித்திருந்தார்.
சமீபத்தில் பாலா அளித்த நேர்காணல் ஒன்றில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு விளக்கமளித்த அவர், மமிதா பைஜூ என் பொண்ணு மாதிரி. அவள்போய் நான் அடிப்பேனா? பொம்பள பிள்ளையை யாரவது அடிப்பாங்களா? மும்பையில் இருந்து வந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட், எனக்கு மேக்கப் பிடிக்காது என தெரியாமல் மமிதா பைஜூவிற்கு மேக்கப் போட்டு விட்டுள்ளது. அதை மமிதா பைஜூவிற்கும் சொல்ல தெரியவில்லை.
யார் மேக்கப் போட்டு விட்டது என கேட்டு, அடிப்பது போல் கையை ஓங்கினேன். அதை நான் மமிதா பைஜூவை அடித்துவிட்டதாக செய்தி கிளம்பிவிட்டது" என விளக்கமளித்துள்ளார். பிரேமலு படம் மூலம் புகழ்பெற்ற மமிதா பைஜூ எச் வினோத் இயக்கி வரும் தளபதி69 படத்தில் நடித்து வருகிறார்.