சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருந்த பாலா - தூக்கிவிட்ட நடிகரையே துரத்திய கொடுமை!

Tamil Cinema Bala
By Vinothini May 09, 2023 09:30 PM GMT
Report

இயக்குநர் பாலா தான் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருந்தபொழுது உதவிய ஒரு நடிகரை துரத்தி அடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாலா

தமிழ் சினிமாவில் விசித்திர இயக்குநரான பாலா தனது படங்களில் நடிக்கும் நடிகை, நடிகர்களை அடித்தும் மிரட்டியும் நடிக்க வைப்பார் என்று பல பேட்டிகளில் பல நடிகர்கள் கூறியுள்ளனர்.

director-bala-brokes-his-friendship-with-an-actor

மேலும், சமீபத்தில் இவர் தயாரிப்பாளர் வி.ஏ. துறையிடம் ரூ.25 லட்சம் வாங்கிவிட்டு திருப்பி தரவில்லை என்று புகார் எழுந்தது.

அதனோடு, வணங்கான் படத்தில் நடித்த துணை நடிகைகளை சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். தொடர்ந்து இவர், நடிகர் அஜித்தையும் தனது படத்திற்காக அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

பாலா இயக்கிய நான் கடவுள் என்னும் படத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது, இதில் அவர் அடித்து துன்புறுத்தியதும், அஜித் விலகி கொண்டதாக கூறப்படுகிறது.

துன்புறுத்திய பாலா

இதனை தொடர்ந்து, இவர் விக்ரம் நடித்த சேது படத்தை இயக்கி வரும் போது, இவரிடம் ஒரு வேலை சாப்பாடு உண்பதற்கு கூட பணம் இல்லாமல் இருந்தார் .

அப்பொழுது விக்ரம் அவரது சின்னத்திரையில் நடித்த சம்பளம் ரூ.60,000-த்தில் ரூ.30,000 இவருக்கு கொடுத்து உதவியுள்ளார்.

director-bala-brokes-his-friendship-with-an-actor

அதன் பிறகு இருவரும் நண்பர்களாக இருந்தனர். இந்நிலையில், விக்ரமின் மகன் துருவ் நடித்த வர்மா படம் அந்த அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை.

படம் எதிர்பார்த்தது போல் இல்லை என்று விக்ரம் கூறியதும் அவரை தாங்காத வார்த்தைகளில் பேசி சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் வம்பு வேண்டாம் என்று விக்ரம் வேறு இயக்குநரை வைத்து ஆதித்ய வர்மா படத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.