மீண்டும் இணையும் பாலா கூட்டணி - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இயக்குநர் பாலா இயக்கவிருக்கும் புதிய படத்தில் அதர்வா முரளி நடிக்கவிருக்கிறார்.இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக அறியப்படும் பாலா கடைசியாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்த ‘வர்மா’ படத்தை இயக்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பாலாவின் அடுத்தப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதர்வா முரளி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மென்ஸ் மூலம் தயாரிக்க உள்ளார்.
ஏற்கனவே அதர்வா பாலா இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான பரதேசி படத்தில் ஹீரோவாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். அதேபோல் சூர்யாவும் பாலா இயக்கத்தில் பிதாமகன், நந்தா, அவன் இவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இந்த 3 பேரும் இணைந்துள்ளது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.