பிரபல இயக்குநர் மாரடைப்பால் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி

Tamil Cinema Death
By Nandhini Sep 24, 2022 03:45 AM GMT
Report

பிரபல இயக்குநர் அசோகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இயக்குநர் அசோகன் மரணம் 

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக இருந்தவர் அசோகன் (64). இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், பகவத் கீதன் என்ற மகனும் உள்ளனர்.

இவர் நடிகர் பார்த்திபன் நடிப்பில் ‘குண்டக்க மண்டக்க’ என்ற படத்தை இவர் இயக்கியுள்ளார். இதனையடுத்து, தமிழச்சி, பொன்விழா உள்பட படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், சென்னை வளசரவாக்கம், பிருந்தாவன் நகரில் வசித்து வந்த அசோகனுக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான திருவாரூக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலி நடத்தப்பட உள்ளது. இவரது மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Director Asokan