அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட இயக்குனர் அனுதீப்…!- வெளியான தகவல் - ரசிகர்கள் சோகம்...!

Prince (2022)
By Nandhini Nov 05, 2022 10:04 AM GMT
Report

'பிரின்ஸ்' பட இயக்குனர் அனுதீப்புக்கு அரியவகை நோய்யால் பாதிக்கப்பட்டுள்ள தகவலால் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 இயக்குனர் அனுதீப்

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான காமெடி திரைப்படம் ‘பிரின்ஸ்’. இப்படம் சமீபத்தில் வெளியானது. முழுக்க, முழுக்க காமெடியை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. மக்களிடையே கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றுள்ளது.

director-anudeep-kv-prince-movie

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட அனுதீப்

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் அரியவகை நோய்யால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், எனக்கு Highly Sensitive Person என்ற அரிய வகை நோய்யால் பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த வகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காபி குடித்தால் இரு தினங்களுக்கு தூங்கவே முடியாது.

ஆப்பிள் ஜூஸ் குடித்தால் மூளையே சுத்தமாக செயல்படாமல் போய்விடும். அதிக ஒளி, அதிக நெடி போன்றவற்றை அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களால் தாங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.