பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர் நீக்கம்: இயக்குனர் அமீர் கண்டன பதிவு

Ameer Sultan
By Fathima Aug 30, 2026 12:29 PM GMT
Report

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி வரலாற்றைக் கூறும் பகுதியில் இடம்பெற்றிருந்த முக்கியத் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தன.

இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் அமீர்

"பெரியார், அண்ணா, அம்பேத்கர் என்பது பெயர்கள் அல்ல... தமிழ்நாட்டின் அடையாளங்கள். அதை அழிக்கவோ மறைக்கவோ எந்த முகமூடியோடு வந்தாலும் அதை எதிர்க்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும்” என பதிவிட்டுள்ளார்.

பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர் நீக்கம்: இயக்குனர் அமீர் கண்டன பதிவு | Director Ameer Statement

அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ராஜ்மோகன், “இடஒதுக்கீடு மானிய கோரிக்கையில் சமூக நீதித் தலைவர்களின் பெயர்களை திட்டமிட்டு நீக்கவில்லை. இதற்கு முந்தைய ஆட்சியில் நீக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்தோம்.

அதன்படி திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக நேரு, பெரியார், அம்பேத்கரின் பெயர்கள் இடஒதுக்கீடு திட்டத்தில் இடம்பெறாமல் இருந்தது. எப்படி நடந்தது என்பது தெரியவில்லை.

ஆனால் நாங்கள் வேண்டுமென்று சமூக நீதிதலைவர்களின் பெயர்களை நீக்கவில்லை. பெரியார், அம்பேத்கரை நாங்கள் கொள்கைத் தலைவர்களாக கொண்டிருக்கிறோம். அவர்களின் பெயர்கள் விரைவில் இடஒதுக்கீடு மானிய கோரிக்கையில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.