"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்"
கரூரில் கடந்த ஆண்டு தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும், 32 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய விஜய், கரூர் கூட்டத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த துயரச் சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும் என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், கரூர் சம்பவத்தில் தாம் குடும்ப உறவுகளை இழந்ததாகவும், அதற்குப் பிறகும் தன் மீதே பழி சுமத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், இயக்குநர் அமீர் தனது கருத்தில், "41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இன்று கைதட்டி மகிழ்ந்தார்களா? உங்கள் கைகளில் காவல்துறை இருந்தும் இன்னும் குற்றவாளிகளை யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லையா?
மக்களை ஏமாற்றும் கோயபல்ஸ் தத்துவம் இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடரும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.