அஜித் அப்படிப்பட்டவர்; என்னோட மனைவியை பார்த்ததும் அவர்.. போட்டுடைத்த ராஜமௌலி!
நடிகர் அஜித் குறித்து இயக்குநர் ராஜமௌலி பேசியுள்ளார்.
இயக்குநர் ராஜமௌலி
இந்திய திரையுலகில் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ராஜமௌலி. இவர் ஸ்டுடென்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து சத்ரபதி, மகாதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ராஜமௌலி, நடிகர் அஜித் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது "ராமோஜி பிலிம் சிட்டி ரெஸ்டாரண்டில் ஒருமுறை அஜித்தை சந்தித்தேன். அவர் ஒரு டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நான் அவரை பார்ப்பதை அஜித்தும் பார்த்துவிட்டார். உடனே அவர் அங்கிருந்து எழுந்து வந்து என்னிடம் எப்படி இருக்கிறீர்கள் சார்? என்று கேட்டார்.
பணிவான மனிதர்
பின்னர் என்னை அவரின் டேபிளுக்கு அழைத்துச் சென்று அமரவைத்தார். அப்போது எனது மனைவி அந்த ரெஸ்டாரண்டிற்குள் வந்தார். நான் உடனே எனது மனைவியை அழைப்பதற்காக திரும்பினேன்.

அப்போது அஜித் என்னிடம் "உங்கள் மனைவியா? என்று கேட்டார். நான் ஆமாம் என்று சொன்னதும், உடனே எழுந்து எனது மனைவியின் சென்று "ஹாய்.. நான் அஜித்" என்று அறிமுகம் செய்தார். பின்னர் எனது மனைவியை அழைத்துக்கொண்டு டேபிளுக்கு வந்தார். அந்த அளவுக்கு அஜித் மிகவும் பணிவான மனிதர்" என்று ராஜமௌலி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் போன்றதொரு நிலையை இலங்கையில் ஏற்படுத்த திட்டம் : அரசு மீது சாகர காரியவசம் பாய்ச்சல் IBC Tamil