ஜனவரி 20ம் தேதி முதல் நேரடித் தேர்வுகள்
By Fathima
வருகிற ஜனவரி மாதம் 20ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளிலும், நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நேரடி தேர்வுகள் எழுத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நேரடி தேர்வுகள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.