அமமுக- அதிமுக நேருக்கு நேர் களம் எங்கே?

election ammk aiadmk direct
By Jon Mar 12, 2021 02:39 PM GMT
Report

நேற்று அமமுகவில் சேர்ந்த ராஜவர்மன், மாலையில் அக்கட்சியின் வேட்பாளர் ஆனார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக அமமுக சார்பில் ராமுத்தேவர், திண்டுக்கல் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். இதே போன்று, விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு எதிராக அமமுகவின் ஆர்.பாலசுந்தரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தை எதிர்த்து ஒரத்தநாடு தொகுதியில் அமமுகவின் சேகர் போட்டியிடவுள்ளார் திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ராஜன் செல்லப்பாவை எதிர்த்து அமமுக சார்பில் டேவிட் அண்ணாதுரை போட்டியிர்கிறார் .

கன்னியாகுமரியில் அதிமுகவின் தளவாய்சுந்தரத்தை எதிர்த்து அமமுக சார்பில் செந்தில்முருகன் களத்தில் இறங்குகிறார் இதுவரை வெளியான 65 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில், சட்டமன்ற உறுப்பினர்கள் 2 பேர். முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் , 18 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு முன்னாள் எம்.பி. மற்றும் ஒரு முன்னாள் மேயர் ஆகியோர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய முகங்கள் 40 பேருக்கு இந்த தேர்தலில் போட்டியிட அமமுக வாய்ப்பு வழங்கியுள்ளது.