உசேன் போல்ட்டையே ஓவர் டேக் செய்த டைனோசர்கள் - ஆய்வில் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்கள்

ussain bolt dinosaurs new research findings interesting facts
By Swetha Subash Dec 13, 2021 01:46 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

டைனோசர்கள் குறித்து அக்காலம் தொடர்ந்து இக்காலத்திலும் பல கதைகள் பேசப்பட்டு வந்தாலும் அவையெல்லாம் இல்லை என நிரூபிக்க ஒருபுறம் ஆய்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் டைனோசர்கள் ஊர்வன இனத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

பல வகையான டைனோசர்கள் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.பூமியின் மீது மோதப்பட்ட மிகப் பெரிய விண்கல்லால் இந்த டைனோசர் இனங்கள் அழிந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த பெரும் விபத்தில் இருந்து தப்பித்த டைனோசர்கள் தான் தற்போது பறவைகளாகவும், ஊர்வன விலங்குகளாகவும் இருந்து வருவதாகவும் ஆய்வுகள் சொல்கின்றனர்.

தினமும் நடத்தப்பட்டு வரும் புதுப்புது ஆய்வுகள் மூலம் புதுபுது தகவல்கள் வெளிவருகின்றன. இந்த ஆய்வின் போது உசேன் போல்ட்டை விட வேகத்தில் அதிகாமாக ஓடக்கூடிய திறன் கொண்ட டைனோசர்கள் முன்பு வாழ்ந்துள்ளதாக ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகின் அதிவேகமாக ஓடக்கூடியவர் உசேன் போல்ட். மணிக்கு 44.72 கிலோமீட்டர் வேகத்தில் அவர் ஓடியிருக்கிறார்.

ஆனால் அவர் வேகத்தை ஓவர்டேக் செய்யும் விதமாக 28 மைல், அதாவது 45.06 கிமீ வேகத்தில் ஓடக்கூடிய திறன் கொண்ட டைனோசர்கள் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அவற்றின் காலடி தடத்தை வைத்து இதனை அடையாளம் கண்டதாக கூறிய ஆரய்ச்சியாளர்கள் இவ்வகை இனத்தை சேர்ந்த டைனோசர் வகைகள் விலங்குகளை வேட்டையாட கூடியதாக இருந்திருக்கும் என தெரிவித்தனர்.

இவை இரையை வேட்டையாடும் நோக்கத்தில் வேகமாக நகர்ந்திருக்கலாம் என ஆய்வின் சாரம்சமாகவும், பிரபலமான டைனோசர்களான டி-ரெக்ஸ் மற்றும் வெலாசிராப்டர் என்ற இரண்டு கால்களில் நடக்கக்கூடிய டைனோசராகவும் அவை இருக்கக்கூடும் என கூறியுள்ளனர்.