மீண்டும் சிக்கலில் தனுஷ் : வாத்தி படத்திற்கு வந்த புதிய சோதனை

dhanush vaathi dineshkrishnan
By Irumporai Jan 26, 2022 05:29 AM GMT
Report

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.   

இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.    

சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் 'வாத்தி' படத்தில் இருந்து விலகியுள்ளார். இத்தகவலை ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் தான் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் 'வாத்தி' படப்பிடிப்பை தொடர்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் புதிய ஒளிப்பதிவாளர் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.