பாகிஸ்தான் போட்டியில் இந்தியா தோற்றதால் நடந்த ஒரே நல்ல விஷயம் இதுதான்...!
பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணி தோற்றது குறித்து இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.
துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 17.5 ஓவரிலேயே அதனை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுடனான போட்டியில் இதுவரை வெற்றியே பெற்றதில்லை என்ற வரலாற்றை பாகிஸ்தான் மாற்றியமைத்தது. இதனிடையே இந்த போட்டியில் இந்திய அணி செய்த தவறு குறித்தும், பாகிஸ்தான் அணி வெற்றி குறித்தும் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் இந்த போட்டியின் வர்ணனையின் போது அருமையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது இதுவரை உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் தோல்வியை தழுவாத இந்திய அணி இந்த போட்டியில் நேர் மாறாக செயல்பட்டு தோல்வியை தழுவியுள்ளது. இது இந்தியாவுக்கு நல்லது தான்.
அந்த ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், இதுவரை பாகிஸ்தான் அணியுடன் தோல்வியை தழுவாததால் அந்த அணியுடன் விளையாட வேண்டிய போட்டியில் இந்திய அணி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் இருக்கும். இதன்மூலம் இனிமேல் அந்த நெருக்கடி இந்திய அணிக்கு இருக்காது.