உலகக் கோப்பையில் இடம் கிடைக்குமா? - பிரபல இந்திய வீரர் ஏக்கம்
Dinesh Karthik
World cup 2023
By Petchi Avudaiappan
இனி நடக்க இருக்கும் உலக கோப்பை தொடர்களில் ஒரு தொடரிலாவது தான் நிச்சயமாக களமிறங்கும் போவதாக இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டிகளை வர்ணனையாளராக தொகுத்து வழங்கி வரும் தினேஷ் கார்த்திக் 2019ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் சரியாக விளையாடாத காரணத்தினால் அதன்பின் வாய்ப்புகள் குறைந்தது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சொதப்பியது எனது தவறு என்றும், ஐபிஎல் தொடரில் எனது திறமையை மீண்டும் வெளிக்கொண்டு வந்து உலக கோப்பை தொடரில் இடம் பெறுவேன் என்றும் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.