ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட தினேஷ் கார்த்திக் : ட்வீட்டை வைரலாக்கி வரும் ரசிகர்கள்!

Board of Control for Cricket in India Dinesh Karthik
By Swetha Subash May 23, 2022 05:33 AM GMT
Report

இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தனது மோசமான ஆட்டத்தின் காரணமாக 2019 -ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இதனால் அவர் சமீபத்தில் போட்டி வர்ணனையாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட தினேஷ் கார்த்திக் : ட்வீட்டை வைரலாக்கி வரும் ரசிகர்கள்! | Dinesh Karthik Twitter Post Believe You Goes Viral

தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம்பெற்றதற்கு முக்கிய காரணம் தற்போது நடைபெற்று வரும் ஐ,பி.எல். போட்டியில் அவர் பெங்களூர் அணிக்காக கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது தான்.

அவரது அதிரடி ஆட்டத்தால் பெங்களூர் அணி தற்போது ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.அவரது விளையாட்டுக்கு பல மூத்த வீரர்களும் பாராட்டு தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து தான் இந்திய அணி உடையுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட தினேஷ் கார்த்திக், ‘உங்கள் ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. நீங்கள் உங்களையே நம்பினால் போதும். அனைத்தும் உங்களை தேடி வரும்’ என பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 287 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இவரது ஸ்டிரைக் ரேட் 191.33-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.